வ.உ.சி. இழுத்த செக்கு... வழக்கு முடித்துவைப்பு...

வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கை அனைவரும் காணும் வகையில் வைக்கக் கோரி மனு

Mar 20, 2024 - 18:47
வ.உ.சி. இழுத்த செக்கு... வழக்கு முடித்துவைப்பு...

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கை அவர் வாழ்ந்த இல்லத்திற்கு மாற்றக்கோரிய வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சுதந்திர போராட்டத்தின்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனாருக்கு செக்கிழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டதாகவும், அந்த செக்கு தற்போது கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த செக்கினை அனைவரும் காணும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்திற்கு மாற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், கோவை சிறையில் உள்ள செக்கை மாற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow