This Week OTT Release: கள்வன், ரோமியோ, ஆவேசம்… இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!
மே இரண்டாவது வாரமான 9, 10 தேதிகளில் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.
சென்னை: இந்த வாரம் ஓடிடியில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்த கள்வன் திரைப்படம் வெளியாகிறது. பிவி சங்கர் இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் 4ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஜிவி பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்த கள்வன், பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் ஓடிடி ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், கள்வன் திரைப்படம் இந்த வாரம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதேபோல், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த ரோமியோ திரைப்படமும் இந்த வாரம் ஓடிடி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. விநாயக் வைத்தியநாதன் இயக்கிய இந்தப் படம் ஏப்ரல் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. விஜய் ஆண்டனியுடன் மிர்ணாளினி ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. திரையரங்குகளைத் தொடர்ந்து இந்த வாரம் அமேசான் ப்ரைம், ஆஹா என இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது ரோமியோ. தமிழில் 7 ஜென்மங்கள் என்ற படமும் இந்த வாரம் பிசினீட் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஆவேசம் திரைப்படம் இன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. ஃபஹத் பாசில் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கிய இந்தப் படம் 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. முழுக்க முழுக்க ஃபஹத் பாசிலின் நடிப்பை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் ஆவேசம் என ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். அந்தளவிற்கு வெரைட்டியாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் ஃபஹத். இதனால் ஆவேசம் ஓடிடி ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது.
இந்தியில் 8 AM Metro, Gadera ஆகிய திரைப்படங்கள் ஜீ 5 ஓடிடியில் இந்த வாரம் வெளியாகின்றன. மேலும் உண்டேகி (Undekhi) வெப் சீரிஸின் மூன்றாவது சீசன் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகிறது. தெலுங்கில் கீதாஞ்சலி மல்லி வச்சிண்டி திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸ் தளத்தில் Mother of the Bride என்ற திரைப்படம், போட்கின் (Bodkin) வெப் சீரிஸ், The Final: Attack on Wembley என்ற டாக்குமெட்ண்ட்ரி சீரிஸ் இந்த வாரம் வெளியாகின்றன. Under The Bridge என்ற வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகிறது.
What's Your Reaction?