டி20 உலகக் கோப்பை முதல் போட்டி: பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய நெதர்லாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து முதல் போட்டியில் மோதின. இதில் நெதர்லாந்திடம் போராடி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

டி20 உலகக் கோப்பை முதல் போட்டி: பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய நெதர்லாந்து
பாகிஸ்தானுக்கு பயத்தை காட்டிய நெதர்லாந்து

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி, இலங்கையின் கொழும்பில் இன்று (பிப்.7) காலை 11 மணி அளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. நெதர்லாந்து அணி முதலில் பேட் செய்து 19.5 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நெதர்லாந்து தரப்பில் அந்த அணியின் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 37 ரன்கள் எடுத்தார். லீட் 30 மற்றும் மைக்கேல் லெவிட் 24, கோலின் ஆக்கர்மேன் 20 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நவாஸ், அப்ரார் அகமது, சயிம் அயூப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷாஹீன் அஃப்ரிடி 1 விக்கெட் கைப்பற்றினர்.

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் பாகிஸ்தான் இருந்தது.அதன் பின்னர் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்தனர். ஃபர்ஹான் ஆட்டமிழந்ததும் உஸ்மான் கான் (0), பாபர் அஸம் (15), முகமது நவாஸ் (6), ஷதாப் கான் (8) ஆகியோர் வெளியேறினர். 

நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத் மற்றும் பால் வான் மெக்ரான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். லோகன் வான் பீக் மற்றும் க்ளென் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.யார் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து பயத்தை நெதர்லாந்து அணி காட்டியது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow