This Week OTT Release: குரங்கு பெடல், கேங்ஸ் ஆஃப் கோதாவரி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

இந்த வாரம் ஜூன் 14ம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

Jun 13, 2024 - 17:32
This Week OTT Release: குரங்கு பெடல், கேங்ஸ் ஆஃப் கோதாவரி... இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் அப்டேட் இதோ!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரித்த குரங்கு பெடல் திரைப்படம், மே 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. கமலா கண்ணன் இயக்கிய இந்தப் படத்தில் காளி வெங்கட் லீடிங் ரோலில் நடித்திருந்தார். நாஸ்டாலஜியா பின்னணியில் வெளியான குரங்கு பெடல் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்தப் படம் நாளை (ஜூன் 14) முதல் ஆஹா தமிழ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மினிமம் பட்ஜெட் படம் என்பதால் குரங்கு பெடல் படத்தை தியேட்டர் சென்று பார்க்காத ரசிகர்கள், ஆஹா ஓடிடியில் ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தெலுங்கில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸில் ரிலீஸாகிறது. கிருஷ்ணா சைதன்யா இயக்கியுள்ள இப்படத்தில், விஷ்வாக் சென், நோரா பத்தேகி, அஞ்சலி, நேஷா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், மேடையில் நின்றுகொண்டிருந்த அஞ்சலியை பாலய்யா தள்ளிவிட்ட வீடியோ வைரலானது. இந்தச் சம்பவம் கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்துக்கு ஃப்ரீ புரோமோஷனாக இருந்தாலும் பெரியளவில் ஹிட்டாகவில்லை. கடந்த மாதம் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான இந்தப் படம், இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.

இதுதவிர தெலுங்கில் டியர் நன்னா, பாரிஜாத பர்வம் ஆகிய படங்கள் ஆஹா ஓடிடியில் வெளியாகின்றன. அதேபோல், பருவு என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியிலும், யாக்ஷினி வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் ஆகின்றன. மலையாளத்தில் ஜனனம் 1947 பிராணாயாம் துடாருன்னு திரைப்படம் சிம்பிளி சவுத் ஓடிடியில் வெளியாகிறது. இந்தியில் அமீர்கான் மகன் ஜுனைத்கான் நடித்து மஹாராஜ் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதேநேரம் இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்ப்பும் காணப்படுகிறது. அதேபோல், Luv Ki Arrange Marriage என்ற இந்தி திரைப்படம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

இந்த வரிசையில் The Holdovers என்ற ஆங்கில திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடியில் ஸ்ட்ரிமிங் ஆகிறது. Agents Of Mystery என்ற கொரியன் வெப் சீரிஸ், Tell Them You Love Me என்ற டாக்குமெண்ட்ரி, Nightmares and Daydreams என்ற இந்தோனேஷியன் சீரிஸ் ஆகியவை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகின்றன. இந்த வாரம் தமிழை விடவும் மற்ற மொழிகளில் இருந்து ஓடிடியில் படங்களும் வெப் சீரிஸ்களும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.      

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow