Pradeep Vijayan: நடிகர் பிரதீப் கே. விஜயன் காலமானார்.. திரை உலகினர் அதிர்ச்சி
தெகிடி பட புகழ் நடிகர் பிரதீப் கே. விஜயன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். உடலில் காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், தெகிடி, டெடி, லிப்ட், இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து கவனம் பெற்றுவந்த நடிகர் பிரதீப் விஜயன் சென்னையில் காலமானார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குளியறையில் பிரதீப் விஜயன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். குளியலறையில் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் துணை நடிகராக நடித்துவந்த பிரதீப், கேரக்டர் ரோல்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்தார்.வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் மட்டுமில்லாமல் சில வெப் தொடர்களிலும் குறும்படங்களிலும்கூட இவர் நடித்துள்ளார். தனக்கு இப்படிப்பட்ட கேரக்டர்தான் வேண்டும் என்று நினைக்காமல் கிடைத்த கேரக்டர்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார் பிரதீப். கவினுக்கு வெளிச்சத்தை கொடுத்த லிப்ட் படத்திலும் க்ளைமாக்சில் ஒரே ஒரு சீனில் மட்டுமே காணப்படுவார். அதில் கவினிடம் கேவலமாக திட்டு வாங்கிக் கொண்டே சிரிக்கும் இவரது கேரக்டர் அனைவரையும் கவர்ந்தது.
சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் காவல்துறையிடம் நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், காவல்துறை உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் உயிர் பிரிந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதீப் கே. விஜயன் தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ள பிரதீப் விஜயனின் மறைவு திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு தற்போது திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.
What's Your Reaction?