Devara: சிவகார்த்திகேயனின் அமரனுக்கு போட்டியாக தேவாரா... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்குப் போட்டியாக ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா ரிலீஸாகவுள்ளது.
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்வதில் படக்குழு தீவிரமாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோ பிக்காக உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் முதன்முறையாக ஆர்மி ஆபிஸராக நடித்துள்ளார்.
அமரன் படத்தின் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனால் அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், ரிலீஸ் தேதி செப்டம்பர் 27ம் தேதியாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. செப்டம்பர் 5ம் தேதி விஜய்யின் தி கோட் ரிலீஸாகிறது. அக்டோபர் 10ம் தேதி ரஜினியின் வேட்டையன் வெளியாகிறது. இந்த இரண்டுக்கும் நடுவில் அமரன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வந்தது.
இந்த நிலையில் அமரனுக்குப் போட்டியாக தேவாரா திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸாகவுள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள தேவாரா பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ஜான்வி கபூர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள தேவாரா படத்துக்கு பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதனால் செப்டம்பர் 27ம் தேதி ரிலீஸாகும் தேவாரா ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமரன் ரிலீஸ் தேதி பற்றி இன்னும் அபிஸியலாக அப்டேட் வரவில்லை. ஆனால் அதற்குள்ளாக தேவாரா படக்குழு ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் அமரன் செப்.27ம் தேதி ரிலீஸாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனிடையே ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட புஷ்பா 2, டிசம்பர் ரிலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?