சென்னையில் இடியோட மழை இருக்கு.. குடையோட வெளியே போங்க.. எச்சரிக்கும் வானிலை மையம்

சென்னையில் ஒருசில பகுதிகளில் மாலை இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Jun 26, 2024 - 15:28
சென்னையில் இடியோட மழை இருக்கு.. குடையோட வெளியே போங்க.. எச்சரிக்கும் வானிலை மையம்

தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் சுள்ளென்று வெயில் அடித்தாலும் மாலை நேரங்களில் ஜில்லென்று மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றைக்கும் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில  இடங்களிலும், வடதமிழக கடலோரப்பகுதிகளில்  ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 20 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா (நீலகிரி) 19, கூடலூர் பஜார் (நீலகிரி), உபாசி TRF (கோயம்புத்தூர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 15, மேல் கூடலூர் (நீலகிரி) 14, தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 13, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 12, அவலாஞ்சி (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 11, நாலுமுக்கு (திருநெல்வேலி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), பார்வூட் (நீலகிரி) தலா 9, காக்காச்சி (திருநெல்வேலி) 8, பெரியாறு (தேனி), செருமுள்ளி (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), செங்கோட்டை (தென்காசி) தலா 7, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்) 6, குண்டாறு அணை (தென்காசி), தேக்கடி (தேனி), நடுவட்டம் (நீலகிரி) தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. 


அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால்   பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாகவும்   இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை தொண்டியில் 38.3° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 31° – 37° செல்சியஸ், தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34° – 37° செல்சியஸ்,  வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34° – 37° செல்சியஸ்,  தென்தமிழக  கடலோரப் பகுதிகளில் 28° – 38° செல்சியஸ் மற்றும் மலைப்பகுதிகளில் 16° – 23°  செல்சியஸ்  பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை சென்னை நுங்கம்பாக்கத்தில் 36.8° செல்சியஸ் (-0.2° செல்சியஸ்) மற்றும் மீனம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் (-1.0° செல்சியஸ்)  பதிவாகியுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூன் 26ஆம்  தேதி தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின்  மலைப்பகுதிகள் மற்றும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

27.06.2024 முதல் ஜூலை 2ஆம் தேதி வரைக்கும்  தமிழகத்தில்  ஓரிரு   இடங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில்  கனமழை  பெய்ய வாய்ப்புள்ளது.

26.06.2024 முதல்  30.06.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில்  ஓரிரு இடங்களில், 2° – 3° செல்சியஸ் இயல்பை விட  அதிகமாகவும்  இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35°-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

26.06.2024 மற்றும் 30.06.2024: மன்னார்   வளைகுடா   மற்றும்  அதனை  ஒட்டிய  தென்தமிழக கடலோரப்பகுதிகள்,  குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்றைய தினம் தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஜூன் 27) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

28.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.06.2024: தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.06.2024: வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: 

26.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
லட்சதீவு மற்றும்   அதனை   ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

27.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
லட்சதீவு பகுதிகள், கேரள -  கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.06.2024 மற்றும் 29.06.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்  மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.06.2024: மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow