தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

தஞ்சை பெரியகோவிலில் வாராஹிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வாராஹி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வரும் ஜூலை 5ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Jun 26, 2024 - 15:39
Jun 26, 2024 - 17:33
தஞ்சை பெரியகோவிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி.. எந்த நாட்களில் என்ன அலங்காரம்

லலிதா சஹஸ்ர நாமத்திலும் விஷூக்ரப் ப்ரான ஹரண வாராஹி வீர்ய நந்திதா, கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா' எனும் நாமங்கள் இந்த அன்னையைக் குறிக்கின்றன. லலிதையின் சேனைகள் அனைத்திற்கும் தலைவியே தண்டநாதா என பக்தர்கள் போற்றும் வாராஹி தேவியாவாள். 'ஜகத் கல்யாண காரிண்ய' எனும் படி உலகம் செழிக்க வேண்டிய பணிகளில் அருளும் ஸப்தமாதர்ளில் தலையானவள். மகாகாளி தாருகாசுரனோடு போர் புரியும்போது அவளுக்குத் துணை நின்றவள் அன்னை வாராஹி.

வழக்குகளிலிருந்து விடுபட வாராஹியின் அருள் கட்டாயம் தேவை. வாராஹி உபாசனை செய்பவருடன் வாதாடாதே என வழக்கு மொழியே உள்ளது. மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க இவள் அருள் கட்டாயம் தேவை. பண்டாசுரனை வதம் செய்ய வேண்டி லலிதா திரிபுரசுந்தரி நால்வகைப் படைகளுடன் புரிந்த போரில் அனைத்திற்கும் தலைமையேற்றதோடு விஷூக்கன் எனும் அரக்கனின் உயிரைக் கவர்ந்தாள் என லலிதோபாக்யானத்தில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலில் வாராஹி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வாராஹி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் வரும் ஜூலை 5ஆம் தேதி தொடங்க உள்ளது. அன்றைய தினம்  மாலையில் இனிப்பு அலங்காரம் நடைபெறும். ஜூலை 6ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 7ஆம் தேதி குங்குமம் அலங்காரமும் நடைபெறும். 

ஜூலை 8ஆம் தேதி சந்தன அலங்காரமும், 9ஆம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 10ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 11ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 12ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 13ஆம் தேதி கனி அலங்காரமும் நடைபெறும் 15ஆம் தேதி இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது. 
மனம் ஒருமைப்பட, வாக்குபலிதம் பெற, எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க அன்னை வாராஹியின் அருள் கட்டாயம் தேவை என்பதால் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும் நேரத்தில் அன்னை வாராஹி தேவியை குடும்பத்தோடு வழிபட வேண்டும்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow