ஆதரவாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு,துண்டு சீட்டில் கருத்துக்கேட்பு:முடிவெடுக்க முடியாமல் ஓபிஎஸ் திணறல்
தேனியில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால், என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் ஓ.பி.எஸ்.மீண்டும் திணறி கூட்டத்தை முடித்து இருக்கிறார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓ.பி.எஸ் பண்ணை வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக பேச வாய்ப்பு வழங்கப்படும் ஆதரவாளர்கள் நம்பி இருந்தனர். ஆனால் துண்டு சீட்டு கொடுத்து அதில் கருத்தை பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டது. இதனால் டென்ஷன் ஆன ஆதரவாளர்கள் கூச்சலிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், " அதிமுக தொண்டர்களின் உரிமைகளை பெறுவதற்கு நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம்.” . தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்களா என்பதை அறியவே இராமநாதபுரத்தில் நான் போட்டியிட்டேன். அப்போது ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 நபர்களை நிறுத்தி செயற்கையாக சூழ்ச்சி செய்தனர்.
அதனை எல்லாம் முறியடித்து அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இன்று வரை சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். தனிக்கட்சி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தேவையற்ற குழப்பங்களை மக்களிடம் பரப்ப வேண்டாம் .
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை முதலமைச்சராக ஆக்கியது தேனி மாவட்டம். தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை. பிடித்திருப்பவர்கள் எல்லாம் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் தலையாய கோரிக்கை. தேனி மாவட்டத்தினர் விருப்பத்தை அறியவே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நான் இணைய வேண்டும் என்பது டிடிவியின் ஆசை. ஒன்று சேர நான் ரெடி. அதிமுகவில் சேர்க்க டிடிவி தினகரனும்
அவரது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா என்பதை கேட்டுச்சொல்லுங்கள். டிடிவி தினகரனை மட்டுமல்லாது தன்னையும் இணைத்தால்தான் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

