11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு பனிமூட்டம் தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
திருவள்ளூர், தருமபுரி உள்பட தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். திருவள்ளூர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
01-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 02-02-2026 மற்றும் 03-02-2026: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை (30-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை 30-01-2026: மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 31-01-2026 முதல் 02-02-2026 வரை எச்சரிக்கை ஏதுமில்லை.மேற்குறிப்பிட்ட நாட்களில் அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
What's Your Reaction?

