வளம் தரும் வைகாசி மாதம்.. ரிஷபத்தில் பயணிக்கும் சூரியனால் ராஜ யோகம் யாருக்கு தேடி வரும்?

மேஷ ராசியில் இதுநாள் வரை உச்சம் பெற்று பயணம் செய்த சூரியன் இன்று முதல் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். இந்த மாதத்தில் மேஷம் முதல் கன்னி ராசி வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

May 14, 2024 - 17:31
May 14, 2024 - 17:41
வளம் தரும் வைகாசி மாதம்.. ரிஷபத்தில் பயணிக்கும் சூரியனால் ராஜ யோகம் யாருக்கு தேடி வரும்?


சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய ரிஷபத்தில் அதாவது, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலமே வைகாசி மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. 

சித்திரை மற்றும் கத்திரி வெயிலுக்காக தள்ளிப்போடப்பட்ட சுப நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. சுகபோகத்தைத் தரும் சுக்கிரனின் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது என்பதால் இந்த மாதத்தில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதில் ஆர்வம் செலுத்தினர் நம் முன்னோர்கள். வசந்தத்தை அள்ளி வழங்கும் வைகாசி மாதத்தில்தான் கோயில்களில் வசந்த உற்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. 

முருகனின் அவதார தினமான வைகாசி விசாகம் உள்ளதால், முருகன் உறையும் ஆறுபடை வீடுகளும் மற்றுமுள்ள அத்தனை முருகத் தலங்களிலும் விசாகத் திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆயுள், செல்வம், புத்திரப்பேறு அனைத்தையும் அளிக்கக்கூடிய மாதம் வைகாசி. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். வேதம், புராணம் ஆகியவை போற்றுகின்ற மாதம் வைகாசி மாதம்.  பல்வேறு சிறப்புகள் கொண்ட வைகாசி மாத ராசி பலன்களை தெரிந்து கொள்வோம்.

மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில்   இருக்கிறார்    தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும், அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.  தொழில் உத்தியோகத்தில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கவனமாக இருக்க வேண்டும், படிப்பில் அதிகமான கவனம் செலுத்துவது நல்லது. ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் சலனம் உண்டாகும்.   கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்  உயர் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். 

ரிஷபம்:  சூரியன்   உங்கள் ஜென்ம ராசியில்  குரு உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார்.  அதிகாரப் பதவி கிடைக்கும், அப்பாவினால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார்    மனதில் பாரம் உண்டாகும், வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார்  பேச்சில் கடுமை அதிகரிக்கும்.  கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம்: சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய வரிவகைகளை செலுத்திவிடுவது நல்லது.  உடல் நலனில் கவனம் தேவை, மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.  பெண்களால் நன்மை உண்டாகும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.  நண்பர்களினால் நன்மை உண்டாகும்.

கடகம்:  சூரியன்  பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வேலை, தொழில் விஷயங்களில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். வைகாசி மாதத்தில் பண வருமானம் அதிகரிக்கும். 

சிம்மம்: உங்கள் ராசிநாதன்  சூரியன்  உங்கள் ஜென்ம ராசிக்கு   பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், புதிதாக வாகனங்கள் வாங்குவீர்கள்.  குல தெய்வக் கோயிலுக்கு செல்லும் நிலை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.  பொழுதுபோக்கு போக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பிதுரார்ஜித சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். 

கன்னி: சூரியன்  ஒன்பதாமிடத்தில்   இருக்கிறார்   பரம்பரையாக செய்து வரும் தொழிலில் மேன்மை நிலை அடையும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினத்தவர்களால் சங்கடம் ஏற்படும் கவனம் தேவை.  பழைய வீட்டை வாங்கி புதுப்பித்து குடியேறுவீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow