வைகாசி மாத ராசி பலன்.. ரிஷபத்தில் பயணிக்கும் சூரியனால் வீடு தேடி வரும் ராஜயோகம்

மேஷ ராசியில் இதுநாள் வரை உச்சம் பெற்று பயணம் செய்த சூரியன் இன்று முதல் ரிஷப ராசியில் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். சூரியன் ரிஷபராசியில் நுழையும் மாதம் வைகாசி மாதமாகும். இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

May 14, 2024 - 18:08
வைகாசி மாத ராசி பலன்.. ரிஷபத்தில் பயணிக்கும் சூரியனால் வீடு தேடி வரும் ராஜயோகம்


துலாம்: சூரியன்  எட்டாம் வீட்டில் இருக்கிறார்.  வேலையிலும் வேலை செய்யும் இடத்திலும் கவனம் தேவை.  வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணம், நகைகளை பத்திரப்படுத்தவும். கனவு நனவாகும் காலம் வந்து விட்டது.  வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.    கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார்  அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள்.   

விருச்சிகம்: சூரியன்  ஏழாமிடத்தில்  இருக்கிறார் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும், அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த பணிகள் சிறக்கும்.  மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். இந்த மாதம் முழுவதும் பணப் புழக்கம் சரளமாக இருக்கும்.  
 
தனுசு: சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வேலை செய்யுமிடத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும் சிறு உல்லாசப்பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு நிலம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். 

மகரம்: சூரியன்  ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். செய்யும் தொழிலில் பண வரவு அதிகரிக்கும், நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.  வீட்டை அழகு படுத்தும் பணியை தொடங்குவீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.

கும்பம்: சூரியன்  நான்காமிடத்தில் பயணம் செய்வதால் வீடு வாகன யோகம்  உண்டாகும், புதிதாக வீடு வாங்குவீர்கள். பரம்பரை சொத்துக்களிலிருந்து பங்கு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்,  புதிதாக வாகனம் வாங்குவீர்கள். மனதில் உள்ள நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். 

மீனம்: சூரியன் மூன்றாமிடத்தில் பயணம் செய்கிறார். அரசாங்கத்திடமிருந்து நல்ல தகவல் கிடைக்கும், தொழிலுக்காக அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும்.  தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் செயல்கள் எல்லாம் சிறப்படையும்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow