கடகம் முதல் கன்னி ராசி: விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள்.. இல்லையென்றால் சிரமம் தான்
கடகம் முதல் கன்னி ராசிக்காரர்களுக்கான இந்த வார ராசிபலன்கள் விவரம் இதோ..

கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு வருகிற வாரம் ஏப்.2 முதல் ஏப்.8 ஆம் தேதி வரையில் என்ன மாதிரியான அணுகுலம் நிலவும் என்பதனை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. மேற்குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்களின் விவரம் பின்வருமாறு-
கடகம்:
உயர்வுக்கு உத்தரவாதம் கிட்டக்கூடிய காலகட்டம். எதிலும் முழு கவனம் இருப்பது முக்கியம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். பணத்தைக் கையாள்வதில் அலட்சியம் கூடாது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். மணமாலை, மகப்பேறு கிட்டும் அறிகுறிகள் தெரியும். வழக்குகள் சுமுகத் தீர்வாகும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் செழிப்பு உருவாகத் தொடங்கும். பங்கு வர்த்தகத்தில் அவசரம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் வாக்குறுதிகளில் நிதானம் காப்பது நல்லது. கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் கிட்டும். மாணவர்களுக்கு மனம்போல் உயர்வுகள் உண்டு. தலை, கழுத்து, மூட்டு, முதுகு உபாதைகள் வரலாம். கணபதி வழிபாடு களிப்பு சேர்க்கும்.
சிம்மம்:
விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள் வரக்கூடிய காலகட்டம். பிடிவாதமும் ரோஷமும் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். ஏற்றம் மாற்றத்திற்கு காத்திருப்பதே நல்லது. இல்லத்தில் இனிமை இடம்பிடிக்கும். இன்சொல்லும் விட்டுக்கொடுத்தலும் இருந்தால் நல்லவை நிலைக்கும். வரவை வீண் செலவு செய்ய வேண்டாம். சுபகாரியங்களில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் திட்டமிடல் முக்கியம். களியாட்டங்கள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர் அடக்கமாகச் செயல்படுவது நல்லது. கலை, படைப்புத் துறையினர் ரகசியங்களை கட்டிக்காப்பதே நல்லது. மாணவர்கள் கவனச் சிதறலுக்கு இடம்தரவேண்டாம். மன அழுத்தம், மூட்டுகள், தொண்டை உபாதை வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு கஷ்டம் போக்கும்.
கன்னி:
வளர்ச்சி ஏற்படத்தொடங்கும் காலகட்டம். இந்த சமயத்தில் வீண் வாதங்கள் கூடாது. பணியிடத்தில் உங்கள் திறமை உணரப்படும். வீண் தர்க்கம் யாருடனும் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும். உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும். யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம். வரவை சேமிப்பது நல்லது. செய்யும் தொழிலில் புதிய முதலீட்டில் நிதானம் தேவை. தரல், பெறலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். அரசு, அரசியலில் உள்ளோர், அடக்கமாக இருப்பதே நல்லது. கலை, படைப்புத் துறையினர் முயற்சிக்கு வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மாணவர்கள் மனம்போல உயர்வுகள் வரும். தேவையற்ற பயணங்களைத் தவிருங்கள். தலைசுற்றல், கழுத்து, நரம்பு உபாதைகள் வரலாம். பெருமாள் வழிபாடு பெருமை சேர்க்கும்.
( மற்ற ராசிக்களுக்கான ராசிப்பலனை தெரிந்துக்கொள்ள குமுதம் இணையதளத்தினை தொடர்ந்து பின்பற்றவும்)
What's Your Reaction?






