Vairamuthu: “பழித்தாரும் வாழ்க… பகைத்தாரும் வாழ்க..” தக் லைஃப் கொடுத்த வைரமுத்து!
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவின் டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை: கடந்த சில நாட்களாக வைரமுத்து – இளையராஜா இருவரும் மறைமுகமாக ஒருவரையொருவர் தாக்கி வருகின்றனர். இசை பெரிதா பாடல் வரிகள் பெரிதா என இளையராஜா தொடக்கி வைத்த விவாதத்தை, கொளுந்துவிட்டு எரிய வைத்தார் வைரமுத்து. இசை தான் பெரிது அது தான் ஒரு பாடலின் முதன்மையான அம்சம் என்பதாக இளையராஜா பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து, பெயர் எப்படி ஒரு மனிதனின் அடையாளம் ஆகிறதோ அப்படி வரிகள் தான் பாடலுக்கு முக்கியம் எனக் கூறியிருந்தார். அதேபோல், இசையும் வரிகளும் சேர்ந்தது தான் பாடல் என்றிருந்தார். இதனை அறியாவதவர் அஞ்ஞானி என இளையராஜாவை மறைமுகமாக சாடியிருந்தார்.
இதனையடுத்து வைரமுத்துவுக்கு நேரடியாகவே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் கங்கை அமரன். அதாவது வைரமுத்து ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டு நன்றி இல்லாமல் பேசுகிறார். அவரை நல்ல கவிஞராக வேண்டாமானால் ஏற்றுக்கொள்ளலாமே தவிர நல்ல மனிதனே கிடையாது. இதற்கு மேல் இளையராஜாவை பற்றி ஏதாவது பேசினால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடும் தொணியில் பேசியிருந்தார் கங்கை அமரன். இளையராஜாவும் வைரமுத்துவும் ஒருவரையொருவர் மறைமுகமாக தான் தாக்கி பேசினர். ஆனால் வைரமுத்து குறித்து கங்கை அமரன் ஓபனாக பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், மீண்டும் இந்த சம்பவத்துக்குள் சைலண்டாக என்ட்ரி கொடுத்துள்ளார் வைரமுத்து. இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் தக் லைஃப் கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார். அதில், “பழித்தாரும் வாழ்க; என்னைப் பகைத்தாரும் வாழ்க; மன்றில் இழித்தாரும் வாழ்க; வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க; என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க; நானோ காலம்போல் கடந்து செல்வேன்..” என குறிப்பிட்டுள்ளார். வைரமுத்துவின் இந்த டிவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?