குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞர்?.. சென்னையில் பரபரப்பு.. போலீஸ் விசாரணை

May 15, 2024 - 11:19
குழந்தையை கடத்த முயன்ற வடமாநில இளைஞர்?.. சென்னையில் பரபரப்பு.. போலீஸ் விசாரணை

சென்னையில் சிறுவனைக் கடத்த முயன்றதாக  வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வடமாநில இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வசிக் அகமது.  ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு  திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு  வசிக் அகமதுவின் இளைய மகனான ரிஸ்வானை வீட்டின் அருகே வைத்துக் கொண்டு அவரது பாட்டி ஜமீனா பேகம்  சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், ஜமீனா பேகத்திடம் சென்று இந்தியில் பேசி “குழந்தையை கொடு குழந்தையை கொடு” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், “யார் என்றே தெரியாத உன்னிடம் எதற்கு குழந்தையை கொடுக்க வேண்டும், யார் நீ” என கேட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் ரிஸ்வானை கடத்த முயன்றதாக தெரிகிறது. 

இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக அங்கு திரண்டு வடமாநில இளைஞர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் வடமாநில இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow