கச்சத்தீவு பிரச்சினை.. 35 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு வரும்.. ப.சிதம்பரம் அச்சம்

கச்சத்தீவு பிரச்சனையை ஜெய்சங்கரும்,நிர்மலா சீதாராமன் கிளப்புவது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் கூறியுள்ளார்.

Apr 6, 2024 - 16:14
கச்சத்தீவு பிரச்சினை.. 35 லட்சம் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு வரும்.. ப.சிதம்பரம் அச்சம்

மக்களவைத் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கச்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துள்ளது பாஜக. மாநிலத்தலைவர் அண்ணாமலை பற்ற வைத்த நெருப்பு ஒரு வார காலமாக பற்றிக்கொண்டு எரிகிறது. திமுக, காங்கிரஸ் கட்சித்தலைவர்களும் அதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கச்சத்தீவு விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். கடந்த 27.01.2015 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பாக தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் எழுத்து மூலமாக  தகவல் கொடுத்த மத்திய அரசு, கச்சத்தீவு என்பது சர்வதேச கடல் சார்ந்த சட்டத்தை பொருத்தது என்றும் இந்த தீவு 1.9சதுர கிலோமீட்டர் இலங்கை நிலப்பரப்புக்கு உட்பட்டது. யாரும் யாருக்கும் தாரை வார்க்கப்படவில்லை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

50 ஆண்டுகள் முடிந்த நிலையில் யாரும் இந்த பிரச்சினையை கிளப்ப கூடாது என தகவல் உரிமை பெறும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஒன்பது ஆண்டுகள் கழித்து அண்ணாமலை 5ம்  தேதி தகவல் உரிமை பெறும் சட்டத்தில் திடீரென கேள்வி கேட்கிறார். 12ம் தேதி அன்று பதில் வருகிறது. பதில் தயாரித்த பின்னர் கேள்வி கேட்டார்களா என கேள்வி எழுப்பினார். 

கச்சத்தீவு பிரச்சனையை ஜெய்சங்கரும்,நிர்மலா சீதாராமனும் கிளப்புவது இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஜெய்சங்கரும்  நிர்மலா சீதாராமனும் , ட.முருகனை போல தமிழிசை சௌந்தர்ராஜன் போல அண்ணாமலை போல ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்டு கச்சம் தீவு பிரச்சினையை பேச வேண்டியதுதானே ? ஏன் மோடி பின்னால் ஒளிந்து கொண்டு பிரச்சனையை எழுப்புகின்றனர் என கேள்வி எழுப்பினார் .

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow