கால்பந்து ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ் : 2026 உலக கோப்பை கால்பந்து திருவிழா: முதல் போட்டி : அர்ஜென்டினா-அல்ஜூரிய அணிகள் மோதல்
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா மற்றும் அல்ஜீரிய அணிகள் மோதுகின்றன.
ஃபிஃபா நடத்தும் கால்பந்து உலகக் கோப்பை 2026-க்கான திருவிழாவிற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.12 குழுக்களாக (குரூப் ஏ முதல் குரூப் எல் வரை) பிரிக்கப்பட்டிருக்கும் இந்த அணிகளில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணியும் அல்ஜீரிய அணியும் மோதுகின்றன.
27 மாதங்களாக நடைபெற்றுவரும் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இதுவரை 42 அணிகள் தேர்வாகியுள்ளன. மீதமுள்ள 6 அணிகள் ஃபிளே -ஆப்ஸ் மூலமாக தேர்வாகும்.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியாகியுள்ளது.
48 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அடுத்தாண்டு ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்கும் இந்தப் போட்டிகள் ஜூலை 19ஆம் தேதி முடிவடைகின்றன.
2026-ல் நடைபெறவிருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பைதான், போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உட்பட பல வீரர்கள் உள்பட பல வீரர்கள் கடைசி உலகக் கோப்பையாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

