ராஜினாமா செய்கிறார் விஜய் ? திருச்சி கிழக்கு தொகுதி புதிய வேட்பாளர்   கு.ப.கிருஷ்ணன் 

திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இந்த தொகுதியில் கு.ப.கிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்த தவெக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ராஜினாமா செய்கிறார் விஜய்  ?  திருச்சி கிழக்கு தொகுதி புதிய வேட்பாளர்   கு.ப.கிருஷ்ணன் 
கு.ப.கிருஷ்ணன்  புதிய வேட்பாளர்  

ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்றைய தினம் எண்ணப்பட்டது. இதில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.   

திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய். சென்னை பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக விஜய் தொடர இருப்பதாக கூறப்படுகிறது. திருச்சி கிழக்கு தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருக்கும்.

அதே நேரம் பெரம்பூர் தொகுதி என்றால், தலைநகர் சென்னைக்கு அருகில் இருக்கும் தொகுதி. இந்த தொகுதியை தக்க வைத்து கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ய விஜய் திட்டமிட்டு இருப்பதாக அக்கட்சி பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில்  லால்குடி தொகுதியில் தோல்வியடைந்த கு.ப.கிருஷ்ணன் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow