சசிகலா வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அவுட் 

சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது. 

சசிகலா வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அவுட் 
சசிகலா செய்த சம்பவம்

அதிமுகவில் இணைய முயற்சி செய்த சசிகலாவிற்கு எடப்பாடி தடை போட்டார். இதனால் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. தேர்தலுக்கு அனைந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியை ஆரம்பித்து தேர்தல் களத்தில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கினார். இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தோல்விக்கு சசிகலாவின் கட்சி காரணமாக அமைந்துள்ளது.

சாத்தூர் தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் திமுக வேட்பாளரை விட 5989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதே தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளர் இசக்கிராஜா 11602 வாக்குகள் பெற்றது நயினாரின் தோல்விக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதேபோல் அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் சசிகலாவின் கட்சி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவற்றில் ஒன்று முதுகுளத்தூர். இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் (68,003) வெற்றிபெற்றார். இங்கே அதிமுக வேட்பாளர் எஸ். பாண்டி பெற்ற வாக்குகள் 47,501. சசிகலா கட்சியின் வேட்பாளர் மருத்துவர் ராம்குமார் பாண்டியன் 40,422 வாக்குகள் பெற்றார். இவர் பெற்ற வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல் உசிலம்பட்டி தொகுதியில் 1805 வாக்குகள் வித்தியாசத்தில் தவெகவிடம் வெற்றியை பறிகொடுத்தது அதிமுக. இங்கே சசிகலாவின் வேட்பாளர் அயப்பன் 16620 வாக்குகள் பிரித்தும் அதிமுக தோல்விக்கு காரணமாக அமைந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow