விஜய் தொடங்கும் புது டிவி சேனல்: 'வெற்றி தொலைக்காட்சி' பிப்ரவரியில் லாஞ்ச்?
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், புதிதாக டிவி சேனல் தொடங்க திட்டமிட்டுள்ளார். வெற்றி தொலைக்காட்சி என பெயரிடப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் லாஞ்ச் ஆகும் எனவும் பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் மட்டுமில்லாது நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக டிவி சேனல்களை தொடங்கியுள்ளன. டிவி சேனல் மட்டுமின்றி பத்திரிகைகள், இணையதள ஊடகங்களையும் சில கட்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக என கட்சிகள் சொந்தமாக டிவி சேனல் வைத்துள்ளன.
அந்த வகையில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு என புதிய டிவி சேனல் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். அதற்கான பேச்சுவார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
கட்சியின் பெயர் முதல் சொல்லான வெற்றி தொலைக்காட்சி கட்சியின் பெயர் தொலைக்காட்சியிலும் இருக்கும் வகையில் 'வெற்றி தொலைக்காட்சி' என்ற பெயரில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
இதற்காக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா மூலம் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட இருக்கிறது.
தொலைக்காட்சிக்கான நிதி ஆதாரங்களை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள இருக்கிறாராம். பிப்ரவரி முதல் வாரத்தில் வெற்றி தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை தொடங்கும் என பனையூர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

