Vijay: “GOAT ரீமேக் மூவியா..? விஜய் கிட்ட ரசிகனா கேக்குறது அது மட்டும் தான்..” வெங்கட் பிரபு ஓபன்!

விஜய் நடித்து வரும் Goat படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என வெங்கட் அப்டேட் கொடுத்துள்ளார். மேலும், விஜய் சினிமாவில் இருந்து விலகுவது பற்றி அவர் பேசியது வைரலாகி வருகிறது.

Mar 4, 2024 - 18:25
Mar 4, 2024 - 19:47
Vijay: “GOAT ரீமேக் மூவியா..? விஜய் கிட்ட ரசிகனா கேக்குறது அது மட்டும் தான்..” வெங்கட் பிரபு ஓபன்!

விஜய்யின் 68வது படமாக உருவாகி வருகிறது கோட் என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன் உள்ளிட்ட மேலும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ரிலீஸ் தேதி உள்ளிட்ட அப்டேட்கள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் கோட் ஷூட்டிங் இந்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார். 

அதேபோல் அஜித், விஜய் இருவருடனும் பணியாற்றியது பற்றியும் வெங்கட் பிரபு மனம் திறந்துள்ளார். அதில் இருவருமே இயக்குநர்களின் ஹீரோக்கள் என பாராட்டியுள்ளார். மேலும் முதலில் விஜய், அஜித்துடன் பணியாற்ற கொஞ்சம் பயம் இருந்ததாகவும், ஆனால் அவர்களே என்னை கூல் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். அதேநேரம் விஜய்யிடம் ஒரு ரசிகனாக நான் கேட்பதெல்லாம், தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் எனத் தெரிவித்துள்ளார். 

இதனிடையே கோட் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் ரீமேக் என சொல்லப்பட்டது. ஆனால் அதுவும் உண்மை கிடையாது என விளக்கம் கொடுத்துள்ளார். GOAT டெக்னிக்கலாக ரொம்பவே ஸ்டாராங்கான படமா இருக்கும் எனவும்,  இந்தப் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் லாஸ் ஏஞ்சல்ஸ் மட்டும் இல்லாமல், சென்னையிலும் 6 நிறுவனங்கள் வேலைப் பார்த்து வருவதாகவும் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow