Nayanthara: “Umm… I’m lost!” இன்ஸ்டா ஸ்டோரியில் இதயம் நொறுங்கிய நயன்தாரா… ரசிகர்கள் அப்செட்
நடிகை நயன்தாராவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தற்போது 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை தொடங்கி தொழிலதிபராகவும் வலம் வருகிறார். முன்னதாக விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்த அவர், இரண்டு குழந்தைகளுக்கும் அம்மாவாகிவிட்டார். இதனால் நயன் Life-ல் செட்டிலாகிவிட்டார் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க, அவரது இன்ஸ்டா ஸ்டோரிஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தான் இன்ஸ்டா, ட்வீட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் ஓபன் செய்தார் நயன். அடுத்த சில தினங்களிலேயே காதல் கணவர் விக்கியை நயன் அன்ஃபாலோ செய்துவிட்டதாக செய்திகள் வைரலாகின. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் அதெல்லாம் வதந்தி என்பதாக விக்கியுடன் சேர்ந்து புல்லாங்குழல் இசையில் மூழ்கிய நயன்தாராவின் வீடியோ மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் மீண்டும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் இதயம் நொறுங்க ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் கறுப்பு நிற பேக்ரவுண்டில் ‘Umm… I’m Lost’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனால் திரும்பவும் விக்கி – நயன் இடையே பஞ்சாயத்தா என ரசிகர்கள் பதற்றத்தில் உள்ளனர்.
What's Your Reaction?