”இதுக்கே பதட்டமா இருக்கு... உதயநிதி தான் காரணம்” இந்தியன் 2 ட்ரைலர் ரிலீஸில் கமல் தக் லைஃப்!
இந்தியன் 2 திரைப்படம் வெளியாக உதயநிதி தான் காரணம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தை முதலில் லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. ஆனால், பட்ஜெட் பிரச்சினை, கிரேன் விபத்து என அடுத்தடுத்து பல சிக்கல்கள் வந்ததால், இந்தியன் 2-வை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. அதன் பின்னர் கமலின் விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால், மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கியது. இதற்கு காரணமாக இருந்தது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான். இதனால் இந்தியன் 2 ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், உதயநிதிக்கு நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்.
சென்னை வடபழனியில் உள்ள Forum மாலில், இந்தியன் 2 ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று காலை நடைபெற்றது. அதில், கமல்ஹாசன், ஷங்கர், அனிருத், சித்தார்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அப்போதுதான் உதயநிதிக்கு நன்றி கூறினார் கமல்ஹாசன். ”இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாக காரணம் உதயநிதி தான். நண்பராக, ரசிகராக இந்தியன் 2 படத்துக்கு ஆதரவு கொடுத்தார், அவருக்கு என் நன்றி” எனக் கூறினார். மேலும், அனிருத் பற்றி பேசிய கமல், 100% அர்ப்பணிப்புடன் எப்படி உழைக்க வேண்டும் என்பதை அனிருத்திடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றார்.
அதேபோல், ஊழல் நிலைக்கு மக்களும் தான் காரணம் எனவும் கமல்ஹாசன் பேசியது வைரலாகி வருகிறது. 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியன் 2 ரிலீஸாகிறது. இந்தியன் முதல் பாகம் வெளியான போது இருந்த அதே ஊழல் அரசியல்வாதிகளின் நிலை இப்போதும் உள்ளது. இதற்கு மக்களும் ஒரு காரணம் எனக் கூறினார். மேலும் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வரும் எனவும், ஆனால் மலையாளத்தில் மம்முட்டியின் சாதனையை முறியடிக்க முடியுமா எனத் தெரியவில்லை, இதுக்கே பதட்டமாக இருப்பதாகக் கூறினார். மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த சிபிஐ திரைப்படம், இதுவரை 5 பாகங்களாக வெளியாகியுள்ளது. அதனை வைத்தே கமல்ஹாசன் பதட்டமாக இருக்கிறது என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?