Vijay: “விஜய் பிறந்தநாளில் சம்பவம் இருக்கு..” தவெக அன்னதானம் விழாவில் சஸ்பென்ஸ்!
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னை: சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் விரைவில் அரசியலிலும் களமிறங்கவுள்ளார். தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வரும் விஜய், இன்னொரு பக்கம் அரசியல் என்ட்ரி குறித்தும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அதேபோல், அரசியலுக்கு வருவதற்காக சினிமாவில் இருந்தே விலகவும் முடிவு செய்துள்ளார் விஜய். அதன்படி, தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து தளபதி 69ல் மட்டுமே நடிக்கவுள்ளார். இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்டு வருகிறார் விஜய். கடந்தாண்டு மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கிய அவர், தற்போது பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அதாவது உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் அன்னதானம் வழங்கப்படும் என தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக கட்சியின் அனைத்து முடிவுகளையும் தலைவர் விஜய் தான் எடுப்பார் என்றும், அவரது அறிவுறுத்தலின் படியே இன்று அன்னதானம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் தினத்தில், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கவிருப்பதாகவும் கூறினார். விஜய்யின் பிறந்தநாள் மட்டுமின்றி வருடத்தின் 365 நாட்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனக் கூறிய அவர், சீமானுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் விஜய் முடிவு செய்வார் என்றார்.
அதேபோல், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சியில் சாப்பாடு மீதம் இருந்தால், அதனை அருகில் இருக்கும் முதியோர் இல்லங்களில் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். ஜூன் 4ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அதன்பின்னர் தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஃபீவர் தொடங்கிவிடும். அந்த ரேஸில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்கும் என அரசியல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேபோல், தவெக கட்சியின் முதல் மாநாடு விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் மட்டுமின்றி பொதுக்கூட்டம் அல்லது மாநாடு நடைபெறும் தேதி அறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக்கட்ட பயணம் குறித்தும் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. விஜய் தனது கட்சியை அறிவித்த பின்னர் திரையுலகம் மட்டுமின்றி, அரசியல் களத்திலும் அவருக்கு கணிசமான ஆதரவு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?