Kadhalikka Neramillai: ஜெயம் ரவியின் கால்ஷீட் பஞ்சாயத்து ஓவர்... முடிவுக்கு வந்த காதலிக்க நேரமில்லை!

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வந்த காதலிக்க நேரமில்லை படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது.

May 28, 2024 - 13:47
Kadhalikka Neramillai: ஜெயம் ரவியின் கால்ஷீட் பஞ்சாயத்து ஓவர்... முடிவுக்கு வந்த காதலிக்க நேரமில்லை!

சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் ராஜராஜ சோழனாக நடித்த ஜெயம் ரவிக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி, ஜீனி, காதலிக்க நேரமில்லை, பிரதர்ஸ், தனி ஒருவன் 2, தக் லைஃப் படங்களில் கமிட்டானார். ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் இருந்து வெளியேறினார் ஜெயம் ரவி. அதேபோல் தனி ஒருவன் 2ம் பாகமும் இன்னும் தொடங்கவில்லை என சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த படம் தனி ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் கமிட்டானார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்யா மேனனும், யோகி பாபு, லால், வினய், பாடகர் மனோ, ஜான் கோகேன் ஆகியோர் லீடிங் ரோலிலும் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டானார். காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் லுக் வெளியான பின்னர் தான், இப்படியொரு படம் உருவாகி வருவதே ரசிகர்களுக்கு தெரியவந்தது. அந்தளவிற்கு சீக்ரெட்டாக படப்பிடிப்பை நடத்தி வந்தார் கிருத்திகா உதயநிதி. ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் ஜெயம் ரவியின் கால்ஷீட் பிரச்சினையால் தாமதமாவதாக சொல்லப்பட்டது.  
 
இதனால் ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை முடிவுக்கு வருமா வராதா என குழப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர் இந்தப் படம் குறித்து எவ்வித அப்டேட்டும் வெளியாகாத நிலையில், தற்போது வதந்திகளுக்கும் சேர்ந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு. அதாவது காதலிக்க நேரமில்லை ஷூட்டிங் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அதில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி, ஹீரோ ஜெயம் ரவி, ஹீரோயின் நித்யா மேனன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கேக் ஊட்டி விடுகிறார். இதனையடுத்து விரைவில் காதலிக்க நேரமில்லை ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரெய்லர் வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.         

காதல் பின்னணியில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை, ரொமான்டிக்கல் ட்ரீட்டாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வணக்கம் சென்னை, காளி என இதற்கு முன் கிருத்திகா உதயநிதி இயக்கிய இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. அதேபோல் கடைசியாக அவர் இயக்கிய பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸும் எதிர்பார்த்த வெற்றிப் பெறவில்லை. அதனால் காதலிக்க நேரமில்லை திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்க பிளான் செய்துள்ளார் கிருத்திகா. இந்தப் படம் ஜெயம் ரவி, நித்யா மேனன், ஏஆர் ரஹ்மான் என சூப்பர் காம்போவில் உருவாகியுள்ளதால், ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow