Vijay: “கில்லி வசூல் இத்தனை கோடி… வருசத்துக்கு ஒரு படம்..” விஜய்க்கு வலை விரித்த தயாரிப்பாளர்!
கடந்த வாரம் ரீ-ரிலீஸான விஜய்யின் கில்லி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.

சென்னை: லியோவை தொடர்ந்து விஜய்யின் கோட் திரைப்படம் தான் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடந்த வாரம் ரீ-ரிலீஸான கில்லி விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ரீ-ரிலீஸான போதும் கில்லி படத்தை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி தீர்த்தனர் ரசிகர்கள். தமிழ்நாட்டி மட்டும் 320 திரையரங்குகளில் வெளியான கில்லி, ஆல் ஏரியாக்களிலும் சொல்லி அடித்தது. அதன்படி சமீபத்தில் ரீ-ரிலீஸான படங்களில் கில்லி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கோலிவுட்டையை அதிர வைத்துள்ளது.
முதல் நாளில் 4.25 கோடியும், இரண்டாவது நாளில் 3.90 கோடியும் வசூலித்த கில்லி, இதுவரை உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் ரேஸில் விஜய் தான் டாப்பில் இருக்கிறார். இப்போது ரீ-ரிலீஸிலும் விஜய்யின் கில்லி பட்டையை கிளப்பி வருகிறது. இதுகுறித்து த்ரிஷா, பிரகாஷ்ராஜ் இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், கில்லி இயக்குநர் தரணி, தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், ரீ-ரிலீஸ் செய்துள்ள விநியோகஸ்தகர் சக்திவேலன் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்தினர். அப்போது விநியோகஸ்தகர் சக்திவேலன் விஜய்யிடம் வைத்த கோரிக்கை ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளது. அதாவது அரசியலுக்குப் போனாலும் வருசத்துக்கு ஒரு படமாவது நடிங்க என சக்திவேலன் கேட்க, அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே அதனை சமாளித்தார். இதனால் விஜய் அரசியலுக்குப் போன பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதுபற்றி விஜய் தனது அறிக்கையில் தெளிவாக கூறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






