ஆஹா கொண்டாட்டம்!
கோயம்பத்தூரில் சிநேகிதிகளை மகிழ்விக்க வருகிறாள் உங்கள் சிநேகிதி!
குமுதம் சிநேகிதியின் ஆஹா கொண்டாட்டம் சீசன் - 4 வரும் 11 ஆம் தேதி கோயம்பத்தூரில் நடக்கவிருக்கிறது. பெண்களை மகிழ்விக்க, உற்சாகப்படுத்த நாள் முழுவதும் கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் பரிசுகளும் நடத்தவிருக்கிறாள் உங்கள் குமுதம் சிநேகிதி. நீங்கள் சமையலில் சகலகலா வல்லியா? நாட்டியத்தில் பத்மினியா? பாடுவதில் கவிக்குயிலா? மெஹந்தி போடுவதில் சிறந்தவரா? மிஸ் கோவை ஆக கலக்க வேண்டுமா? அட கவலையை விடுங்க.. உங்களுக்காக உங்கள் ஊரில் உங்களை உற்சாகப்படுத்த வருகிறாள் உங்களின் குமுதம் சிநேகிதி.
ரங்கோலி ராசாத்தி என்னும் கோலப்போட்டி, அறுசுவை ராணி Cooking என்னும் சமையல் போட்டி, மிஸ் கோவை - ஃபேஷன் வாக், தில்லானா தில்லானா என்னும் நாட்டியப் போட்டி, கோவையின் சின்னக்குயில் பாட்டுப்போட்டி- மெஹந்தி மகாராணி, மியூசிக்கல் சேர், ஹேர் டிரஸிங் என்று பல போட்டிகள் வரிசைக்கட்டும் நிலையில் அவற்றில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் சிநேகிதிகளும் வரிசைக்கட்டலாம்.
கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவரும் சிநேகிதிகளுக்கு அறுசுவை உணவும், மாலை ஸ்நாக்ஸும் வழங்கப்படும். போட்டிகளும் பரிசுகளுமாய் நாள் முழுவதும் கொண்டாட்டமாய் இருக்க உடனே முன்பதிவு செய்யுங்கள். நேரில் சந்திப்போம்.
ஆஹா கொண்டாட்டம்,
GP கிராண்ட் கேலக்ஸி
சத்தி ரோடு,
GP சிக்னல் அருகில்,
பி.கே.ஆர். நகர், காந்திபுரம்,
கோவை -641 012.
நாள்- ஞாயிற்றுக்கிழமை
நேரம்- காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை
தொடர்புக்கு - 80560 99037, 99401 35394, 80560 99040.
What's Your Reaction?

