பெண்கள் ஹாப்பி அண்ணாச்சி: தங்கம் சவரன் ரூ.720 சரிவு
முன்றாவது நாளாக தங்கம் இன்றும் விலை சரிந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ.720 குறைந்து உள்ளது. அதே போன்று வெள்ளியும் கிலோவிற்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து இருப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை கடும் உச்சத்தை தொட்டு வந்தது. 1 லட்ச ரூபாயை தாண்டி தங்கம் சவரனுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த சில நாட்களாக நகைப்பிரியர்களுக்கு கவலை அளிக்கக்கூடிய செய்தியாக அமைந்திருந்தது.
நேற்றைய தங்கம் விலை குறைந்தது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,320க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
3-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,840 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,320 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று சற்றே குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.5 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

