விஜய்யின் தவெக மாநாடு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி
தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தனக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
நடிகர் ரஜினியின் பிறந்த நாள் மற்றும் தீபாவளி, பொங்கல், ஜனவரி 1 ஆகிய முக்கிய பண்டிகை நாட்களில் அவரை சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம்
நடிகர் ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம், இன்று தீபாவளி பண்டிகையையொட்டி ரஜினிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பு இன்று காலையிலேயே ஏராளமான ரசிகர்கள் திரண்டு உள்ளனர்
அவரது வீட்டுக்கு வெளியே போடப்பட்டுள்ள தடுப்புகளுக்கு முன்னால் நின்று ரசிகர்கள் ரஜினியை பார்ப்பதற்கு காத்திருக்கிந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து விஜய் நடத்திய மாநாடு குறித்த கேள்விக்கு “விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார், விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?