தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது.

Oct 31, 2024 - 14:38
தீபாவளி; மோசமடைந்த காற்றின் தரக் குறியீடு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளது.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே மக்கள் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கி விட்டனர். இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே புகைமூட்டமாக மாறியது. சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 204 என்ற அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் 154, கடலூரில் 148, கோவையில் 104, புதுச்சேரியில் 119 என்ற அளவில் காற்றின் தர குறியீடு மிதமான அளவில் அதிகரித்துள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது. கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow