Ajith: பொங்கல் ரேஸில் விடாமுயற்சி... குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி மாற்றம்... அஜித் ரசிகர்கள் அப்செட்!
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் பொங்கலுக்கு வெளியாகவிருந்த குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது ஒரேநேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என இந்த இரண்டு படங்களும் அஜித் நடிப்பில் வெளியாகவுள்ளன. இதில், மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனிடையே விடாமுயற்சி படப்பிடிப்புக்கு சில மாதங்களுக்கு முன்னர் பிரேக் விடப்பட்டிருந்தது. அப்போது முதல் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கத் தொடங்கினார் அஜித். அதுமட்டும் இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் போதே, ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதை படக்குழு கன்ஃபார்ம் செய்திருந்தது. இந்நிலையில், தற்போது விடாமுயற்சி படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதாவது விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் உள்ளன. இது முடியவே நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் ஆகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் விடாமுயற்சி படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்து வருகிறதாம். அதேநேரம் ஏற்கனவே குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கல் ரேஸில் களமிறங்க ரெடியாகவுள்ளது. இதன் காரணமாக வேறு வழியே இல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸானால், குட் பேட் அக்லி அடுத்தாண்டு சம்மர் ஸ்பெஷலாக வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுகுறித்து உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தின் இரண்டாவது பாடலுக்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இரு தினங்களாக நடைபெற்று வரும் இந்த ஷூட்டிங், இன்னும் ஓரிரு தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது. தேவிஸ்ரீ பிரசாந்த் இசையில் பார்ட்டி சாங்காக உருவாகியுள்ள இந்தப் பாடல், அஜித் ரசிகர்களுக்கு வைப் மெட்டீரியலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
விடாமுயற்சி படத்தை தீபாவளி ஸ்பெஷலாக எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, இந்த அப்டேட் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களாகவே விடாமுயற்சி படத்தில் இருந்து போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டு வருகிறது படக்குழு. ஒவ்வொரு அப்டேட் வரும் போதும் அதில், படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், இப்போது வரை அது கன்ஃபார்ம் ஆகவில்லை என்பதோடு, தற்போதைய நிலவரப்படி விடாமுயற்சி அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றே தெரிகிறது.
What's Your Reaction?