“கிரீஸ் நாட்டில் அனிருத்தின் கல்யாணமா?..... வெளியான தேதி இதுதானா!
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் நெட்ஒர்க் தலைவரின் மகள் காவ்யா மாறன் இருவரது திருமணம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் நடக்கப்போவதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், தற்போது தனது இசைப் பணிகளைத் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களால் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார். சன் நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளருமான காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்ய இருப்பதாக திரைத்துறை வட்டாரங்களில் புதிய தகவல்கள் பரவி வருகின்றன.
நவ.10-ல் கிரீஸில் திருமணம்?
அனிருத் மற்றும் காவ்யா மாறன் இடையே திருமணப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், வரும் நவம்பர் 10-ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இவர்களது திருமணம் சீஷெல்ஸ் தீவுகளில் நடைபெறலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது திருமண இடம் கிரீஸ் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் திருமணமாக இல்லாமல், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் வெளிநாடுகளில் சில நாட்கள் நேரத்தை செலவிடத் திட்டமிட்டுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
அனிருத் – காவ்யா மாறன் திருமணம் தொடர்பான இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், தற்போது வெளியாகி வரும் தகவல்களை உறுதி செய்யப்படாத செய்தியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
திருமணத்திற்கு முன் படப் பணிகளை முடிக்கிறாரா அனிருத்?
இதற்கிடையே, அனிருத் தனது கைவசம் உள்ள பல முன்னணி படங்களின் இசைப் பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக "தி பாரடைஸ்", ரஜினிகாந்த் நடிக்கும் "ஜெயிலர் 2", ஷாருக்கான் நடிக்கும் "கிங்" உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
திருமணம் குறித்த தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதற்கு முன்பாக முக்கியமான படங்களின் பணிகளை முடிக்க அனிருத் திட்டமிட்டு வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. சன் குழுமம் மற்றும் ஐபிஎல் போட்டிகள் மூலம் ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான காவ்யா மாறன், மறுபுறம் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் — இருவரது திருமணம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
ஆனால், நவம்பர் 10-ம் தேதி கிரீஸில் திருமணம் நடைபெறுமா என்பது குறித்து இரு குடும்பங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே தொடரும்.
What's Your Reaction?
