செம.. உலகநாயகனுடன் ஒரே ஸ்கிரீனில் துள்ளல் நடனமாடும் சிம்பு!

தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடல் “ஜிங்குச்சா” நாளை வெளியாக உள்ள நிலையில், அதுக்குறித்த போஸ்டர் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

Apr 17, 2025 - 12:14
Apr 17, 2025 - 12:15
செம.. உலகநாயகனுடன் ஒரே ஸ்கிரீனில் துள்ளல் நடனமாடும் சிம்பு!
thug life movie first single jinguchaa releasing tomorrow

'தக் லைஃப்' திரைப்படத்தின் வாயிலாக உலகநாயகன் கமல் ஹாசனுடன் 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைக்கோர்கிறார் இயக்குநர் மணி ரத்னம். அதனாலயே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிக அதிகமாக உள்ளது.

கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அலி ஃபசல், பங்கஜ் திரிபாதி, சான்யா மால்ஹோத்ரா, ரோஹித் சராஃப் மற்றும் வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மேற்கொண்டு வர, படத்தொகுப்பை ஏ.ஸ்ரீகர் பிரசாத் செய்து வருகிறார். ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு 2024 ஜனவரியில் தொடங்கி, செப்டம்பர் 2024-இல் முடிக்கப்பட்டது . அதன்பின், சிலம்பரசன் மற்றும் த்ரிஷாக்கு இடையேயான ஒரு காதல் பாடல் வடஇந்தியாவில் படமாக்கப்பட்டது . படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. ஜிங்குச்சா என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலை கமலஹாசன் எழுதியுள்ளார். பாடல் வெளியீடு அறிவிப்பு தொடர்பான போஸ்டர் ஒன்றினை படக்குழு வெளியிட்டுள்ளது. கமலும்,சிம்புவும் ஒன்றாக நடனமாடும் வகையில் இருக்கும் போஸ்டர் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow