நான் விருதுக்காக எதையும் செய்வது இல்லை! ராஜாவின் வேலியண்ட் சிம்பொனி மேஜிக்.....

சிம்பொனியை செல்போனில் கேட்பதும்.திருப்பதிக்குப் போய் லாலா கடையில் லட்டு வாங்கித் தின்பதும் ஒன்றுதான் லைவ்வா கேட்டாதான் சிம்பொனியை ஸ்பெஷல் அப்படி ஒரு வாய்ப்பு சென்னையில் கிடைப்பதெல்லாம் பெருமாளே பெரியமேட்டுக்கு வந்த மாதிரி

நான் விருதுக்காக எதையும் செய்வது இல்லை! ராஜாவின் வேலியண்ட் சிம்பொனி மேஜிக்.....
குமுதம்

சென்னை, நேரு ஸ்டேடியத்தில் லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இசைக் கடவுள் அந்த அதிசயத்தை நிகழ்த்தப் போகிறார் என்று தெரிந்ததும், ராஜாவின் ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து படையெடுத்து வந்துவிட்டனர். அறிமுகமில்லாத சிம்பொனி இசையைக் கேட்க ஒரு திறந்தவெளி அரங்கம் நிரம்பும் அளவிற்குக் கூட்டம் வருமா?' என்ற சந்தேகம் பலரிடமும் இருந்தாலும், மைதானத்தின் 75 சதவிகித5 இருக்கைகள் நிரம்பியிருந்தது தமக்கே ஆச்சரியமாக இருந்தது.
ராஜாளின் வேலியன்ட் சிம்பொனி இசைக் கோர்வை பற்றி எந்த அறிமுகமும் தரப்படவில்லை என்றாலும் இசைக் குழுவினர் பற்றி ராஜா தந்த சிறிய அறிமுகத்தில் அவர்களின் பெருமை முழுவதும் அடங்கியிருந்தது.

நடிகர் சித்தார்த் சிம்பொனி இசை யின் வடிவமைப்பு பற்றிச் சுருக்க மாக பேசு, 'இசைக்கு எதற்கு விளக்கம்? என்று அதையும் நறுக்கென முடித்து வைத்தார். ராஜா
அழகான சூழல், துல்லியமான ஒலி அமைப்பு, திறமை யான இசைக் கலைஞர் கள். ஓர் அற்புதமான அனுபவத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த நேரத்தில், இளையராஜா தத்துவ மாகச் சொன்னது, இரண்டே விஷயங்கள்தான்...

என் இசையின் மூலம் மேற்கத்திய கலாசாரத்தையும் நம் கலாசாரத்தையும் நான் இணைக்க வரவில்லை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடவும் விரும்பவில்லை. உலகின் அனைத்துக் கலாசாரங்களும் ஒன்றுதான் என்பதை என் இசையின் மூலம் உணர்த்தவே விரும்புகிறேன் இதுதான் அவரது
முதலாவது தத்துவ நிலைப்பம் சொன்னது மட்டுமின.

பிராண்ஸ் சூபேர்ட்டில் சிம்பொனியை லண்டன் ஃபில் மோனிக் இசைக் குழுவினரை வாசிக்க வைத்து, அதற்கு இணையாக 'இதயம் போகுதே. பாடலை தானே பாடி, இரண்டும் மிகச் சரியாகப் பொருந்துவதை ரசிகர்களுக்கு மேஜிக் மாதிரி செய்து காட்டினார் அதன் மூலம், 'மிகச் சாதாரண விஷயங்கள் கூட ஒரு மேன்மை யிலிருந்து பிறக்க முடியும் அதிலும் அந்த மேன்மை யின் உன்னதம் இருக்கும் இங்கு எல்லாம் ஒன்று தான். எதுவும் உயர்ந்தது தாழ்ந்தது இல்லை என்று தன் இசையின் இரண்டாவது தத்துவ நிலைப்பாட்டையும் இசையாக வாசித்துப் புரியவைத்தார்.

'எது உயர்ந்தது சிறந்தது என்று யார் என்ன சொன்னாலும் நாமாகவே இருப்போம். நமக்கு விருப்பமானதை ரசிப்போம் விருப்பம் இந்த உலகத்தாலும் விரும்பப்படும்போது. ஏசிக்கம் படும்போது நம் ரசனையும் உயர்வானதாக உணரப்படும் எ தன் இசையின் இரண்டாவது தத்துவ நிலைப்பாட்டை விளக் சொன்னார்.
இளையராஜா தன் ரசிகர்களால் கடவுளின் நிலைக்கு உயர்த்தப் படுகிறார் என்றால் அவரது இசைப் பயணம் மனிதத்தை மேம்படுத்தும் பல தத்துவங்களை உள்ளடக்கி இருப்பதால்தான்! அவர் பலரையும் போல் ஒரு திறமையான இசைக் கலைஞரோ. இசையைக் கற்றறிந்த மேதையோ மட்டுமல்ல இசைக்கே புதிய அர்த்தத்தைத் தோற்றுவிக்கும் தத்துவ ஞானி. நான் விருதுக்காக வேலை செய்வது இல்லை' என்று பகிரங்கமாக மேடையில் முழங்கியவரை, சினிமாவுக்கு மெட்டமைப்பவர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட இன்றுவரை நடக்கும் அரசியலை அவர் வென்று காட்டியதன் சாட்சிதான் இந்த 'வேலியன்ட்' சிம்பொனி இசைக் கோர்வை.

இதையும் பாக் பீத்தோவனுடன் ஒப்பிட்டுத் தன்னைப் பள்ளத்தில் தள்ள நினைப்பார்கள் என்று உணர்ந்தே அவர்களின் சிம்மாசனங் களுக்கு மத்தியில் தனக்கொரு இடத்தைத் தேடாமல், அவர்களோடு தன்னையும் நினைவுகூரும் விதத்தில், தன் தனித்துவம் வெளிப்பட அவர்களின் பாதையில் தன் சுவடுகளையும் அழுந்தப் பதித்திருக் கிறார், ராஜா. இதை இசைக் குழுவை ஒருங்கிணைத்து நடத்திய மிகேல் டாம்ஸ் தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
சினிமாவுக்கு மெட்டமைப்பவர் என்கிற குறுகிய வட்டத்துக்குள் சுருக்கிவிட இன்றுவரை நடக்கும் அரசியலை அவர் வென்று காட்டியதன் சாட்சிதான் இந்த 'வேலியன்ட்' சிம்பொனி இசைக் கோர்வை.

இறுதியாக, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா 'மடை திறந்துட் நீ பார்த்த பார்வைக்கு 'பூவே செம்பூவே...' போன்ற சில பாடல்களை மேற்கத்திய செவ்வியல் இசை பாணியில் இசைத்து, தன் திரை இசைப் பாடல்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் உலக செவ்வியல் இசைக்குரிய மரபுகள் மட்டுமல்ல, உன்னதமும் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை நம் நடுமண்டையில் குட்டிச் சொல்லாத குறையாகப் புரியவைத்தார். ராஜா.
பார்த்திபன் புகழ்ந்தது. கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ் நெகிழ்ந்தது என்று வழக்கமான சினிமா டிராமாக்கள் அதே மேடையில் நிகழ்ந்தாலும், ஃப்ரம் ராஜா வித் லவ்' அழகிய பொன் மாலைப் பொழுது 'அன்னக்கிளியே' பாடல் துவக்க ஹம்மிங் போலவே காலங்களைக் கடந்தது ஏகாந்தமானது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow