அண்ணாமலைக்கு ஷிஃப்டாகும் ரஜினி, அஜித் fans? விஜய்க்கு காத்திருக்கும் பலே ட்விஸ்ட்!

பாஜகவை விட்டு அண்ணாமலை விலக உள்ளதாக தகவல் வெளியானதில் இருந்து, ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் கொத்துக் கொத்தாக அப்படியே அண்ணாமலை பக்கம் ஷிஃப்டாக தொடங்கியுள்ளது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறது பனையூர் வட்டாரம்.

அண்ணாமலைக்கு ஷிஃப்டாகும் ரஜினி, அஜித் fans? விஜய்க்கு காத்திருக்கும் பலே ட்விஸ்ட்!

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் திரை பிம்பம் என்பது மிக முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. பேரறிஞர் அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் எடப்பாடி பழனிசாமி தவிர்த்து மற்ற அனைத்து நபர்களும் திரைத்துறையில் இருந்து வந்தவர்களே. கலைஞர் கருணாநிதி (வசனகர்த்தா), எம்.ஜி.ஆர் (நடிகர்), ஜானகி ராமசந்திரன்( நடிகை & எம்.ஜி.ஆர் மனைவி), ஜெயலலிதா (நடிகை), மு.க.ஸ்டாலின் (நடிகர்), விஜய்(நடிகர்) என திரைத்துறைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசியல் களத்தை நிர்வகிக்கும் நபர்களாக இருந்துள்ளனர்.. இன்றும் இருந்து வருகின்றனர். 

இத்தகையச் சூழல், திரைத்துறையச் சேர்ந்த விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க பாஜக அவரை அரசியலுக்கு வர அழுத்தம் கொடுத்தாகக் கூறப்பட்டது. ஆனால், ரஜினியோ அதற்கு ஈடுகொடுக்காமல் அரசியலுக்கு வரபோவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

அதோடு, விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, விஜய்க்கு எதிராக அஜித்தையும் கையில் எடுக்க நினைத்த பாஜக, அவருக்கு பத்மபூஷன் விருதை வழங்கி அஜித் ரசிகர்களை கவர நினைத்தது. ஆனால், அந்த பிளானும் இந்த தேர்தலில் சொதப்பிவிட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த நிலையில், தான் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் ஷிஃப்ட் செய்துள்ளார் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை என்கின்றனர உள்விவரம் அறிந்தவர்கள்.

பாஜகவில் தனக்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கப்படவில்லை என்றும், அதிகாரம் கொடுக்காமல் சும்மா டம்மியாக்கி உட்கார வைத்துள்ளனர் என்றும் டெல்லி மேலிடம் மீது அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்செட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது. அதன்வெளிப்பாடக பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக முடிவெடுத்துள்ளதாகவும், அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் அண்ணாமலை பக்கம் ஷிஃப்டாகிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ரஜினி மற்றும் அஜித் ஆகியோர் கைக்களை அண்ணாமலை பிடித்திருப்பது போன்ற போஸ்டர் மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது. உன்னோடு இரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் என்ற வரிகளுடன் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டாரால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

என்னத்தான், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தாலும், அவரால் விஜய்க்கு இருக்கும் மவுசை தொட முடியுமா என்றால் எது கேள்விக்குறித்தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இவர்களின் ஆதரவு அண்ணாமலைக்கு உத்வேகத்தை தருமே தவிர, மற்றப்படி இதனால் எந்த பலனும் அவருக்கு கிடைக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow