முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவரின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவரின் நினைவாலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவர் திருமகனாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக கூறினார். மேலும், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் சிலைக்கு கீழே உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், தெப்பக்குளம் பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் சிலைகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, அன்பில் மகேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?