முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி - ரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவாலயத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவாலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்துடன் சிலைக்கு மாலை அணிவித்தும் தீபாராதனை காட்டியும் வழிபாடு செய்தார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருச்சி எம்.பி துரை வைகோ, தேவர் நினைவாலயத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பேட்டியளித்த அவர், மதவாத சக்திகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இடமளித்துவிடக் கூடாது எனக் கூறினார்.
தொடர்ந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேட்டியளித்த அவர், 2026-ல் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறார் என விமர்சனம் செய்தார். சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்காக பெரும்பான்மை இந்துக்களுக்கு எதிராக திமுக செயல்படுகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?