உஷார இருங்க இல்லான கஷ்டப்படுவீங்க: தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமை 1-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் கடைகள் உள்ளன.இதில் 3240 பார்களும் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் (TASMAC) கடைகளில், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் மது விற்பனை மிக அதிகமாக, சில நேரங்களில் ஒரே நாளில் ₹220 கோடி முதல் ₹270 கோடி வரை (குடியரசு தினம், தீபாவளி, சுதந்திர தினம்) நடைபெறுகிறது.
சாதாரண நாட்களில் இந்த விற்பனை சுமார் 150 கோடி ரூபாய் வரை மதுவிற்பனை இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது, மேலும் ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதுவிற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
ஜனவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மது பிரியர்கள் வழக்கத்தை விட கூடுதலாக மது வகைகளை வாங்கினர். ஏனென்றால் மறுநாள் 26-ம் தேதி குடியரசுதினம் அன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை. இதனால் அன்று ஒரே நாளில் மட்டும், 220 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான வகைகள் விற்பனையாகின.
கடந்த சனிக்கிழமை, 190 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. இரண்டு நாட்களில், 410 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜன., 25ம் தேதி, 200 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையானது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 1ம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?

