"பழனிச்சாமி விவசாயி இல்லை... விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு"..EPS-யை கடுமையாக சாடிய முதலமைச்சர்!

Apr 6, 2024 - 23:44
Apr 7, 2024 - 00:47
"பழனிச்சாமி விவசாயி இல்லை... விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு"..EPS-யை கடுமையாக சாடிய முதலமைச்சர்!

சிதம்பரம், மயிலாடுதுறை வேட்பாளர்களை ஆதரித்து சிதம்பரத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை கடுமையாக சாடி எதுகை மோனையில் பேசினார். 


சிதம்பரம் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவன் மற்றும் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள் கூட சொல்லக் கூசுகிற பொய்களை பழனிச்சாமி கூறுகிறார். அத்துடன் தன்னை உழைப்பிலே உயர்ந்தவர் என்று சொல்கிறார்.  இதையெல்லாம் யாராவது புயல் காற்றில் பொரி சாப்பிடுபவர்களிடம் போய் சொல்லுங்கள் என நக்கல் செய்தார். அதுமட்டுமில்லாமல் உழைப்பிலே உயர்ந்தாரா அல்லது ஊர்ந்து சென்று உயர்ந்தாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "அதிமுக அடிப்படை தொண்டர் கூட முதலமைச்சராகலாம் என எடப்பாடி கூறுகிறார். ஆனால் கூவத்தூரில் நடந்ததை நீங்கள் மறைக்கலாம். அதனை மக்கள் மறக்க மாட்டார்கள்" என நா தழு தழுக்க பேசினார். அத்துடன் ஊழல் வழக்குகளால் திமுக ஆட்சி கலைப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி பொய் பிரசாரம் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும், "விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை பழனிச்சாமி ஆதரித்துவிட்டு பச்சைதுண்டு போட்டு பச்சை பொய்களை கூறுகிறார். தன்னை கடைசி விவசாயி என்று நினைத்துக்கொள்ளும் பழனிச்சாமி,  விவசாயி இல்லை விவசாயிகளை அழிக்க நினைத்த விஷவாயு" என கடும் எதுகை மோனையில் விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow