சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி டிசம்பரில் அறிவிப்பேன் : ராமதாஸ் அதிரடி
2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என டிசம்பரில் அறிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், அருள் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர், அன்பழகன், மாநில நிர்வாகிகள், கட்சி அமைப்பு ரீதியாக உள்ள 108 மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள், யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது, எத்தனை தொகுதிகள் கூட்டணியில் கேட்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகுபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அடுத்த மாதம் சேலம் ஆத்தூரில் உள்ள தலைவாசலில் பாமக கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன். சாதிவாரி கணக்கெடுப்பை முன்னெடுக்காத தமிழக அரசை கண்டித்து டிச.12-ந்தேதி மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?

