"உங்கள் ஊருக்கு செல்லுங்கள்".. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டிய உடன்பிறப்புகள்

Apr 6, 2024 - 21:57
"உங்கள் ஊருக்கு செல்லுங்கள்".. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விரட்டிய உடன்பிறப்புகள்

"உங்கள் ஊருக்குச் செல்லுங்கள். இது எங்கள் ஊர்" எனக் கூறி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுகவினரே திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் திசையன்விளை நகர பகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இது தகராறாக மாறத் தொடங்கவே எல்லோரும் அமைதியாக உட்காரும்படி அனிதா ராதாகிருஷ்ணன் கூறியும் அதை திமுகவினர் யாரும் கேட்கவில்லை.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை வெளியே போகச் சொல்லி திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். இதனால் திகைத்துப் போன அவரை காவல்துறையினர் பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

திசையன்விளை கூட்டத்தில் உட்கட்சி பூசலால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுகவினர் திருப்பி அனுப்பிய சம்பவம் அக்கட்சியின் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow