தமிழ்நாடு வளர்ச்சிக்கு ரூட் போட்ட விஜய்...பிரதமரிடம் வைத்த 7 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் எனக் கூறிய முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியிடம் 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்போம்.

Oct 12, 2026 - 20:00
தமிழ்நாடு வளர்ச்சிக்கு ரூட் போட்ட விஜய்...பிரதமரிடம் வைத்த 7 முக்கிய கோரிக்கைகள் என்னென்ன?

சென்னை மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர்  விஜய் கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் திறந்து வைத்த அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு நன்றி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழைத் தாய்மொழியாக கொண்ட மக்கள் வாழும் இம்மாநிலம், சிறப்பான வரலாறு. இலக்கியம், கலை, கட்டிடக் கலை, பண்பாடு, மரபுகளால் தனித்துவம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பை மாற்றி புதிய அரசியல் பயணத்தை தொடங்கி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்துள்ளோம். சமூகநீதியுடன், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி என்பதை நோக்கி பயணித்து வருகிறோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றஉயரிய தத்துவத்தின் அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம். வேளாண் வளர்ச்சி, மீனவர் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காக கொண்டுள்ளோம்.

அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொழில்,அறிவியல் கலை இலக்கியம், சமூக நீதியில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பங்களித்து வரும் மாநிலம் தமிழ்நாடு.

மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படும்போது. பலன் மக்களின் வாழ்க்கையில் நேரடியாக பிரதிபலிக்க வேண்டும் என்பது தான் தவெக அரசின் அணுகுமுறை எனவே, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.

2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முன்னேறுகிறோம். இந்த வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல புத்தாக்கம், முதலீடு, உட் கட்டமைப்புக்கு  அதிக முக்கியத்துவம் அளித்து வருகி றோம். அதேநேரம், தற்போதைய திட்டங்கள், அடுத்த தலைமுறைக்கான முதலீடுகளாக அமைய வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.

பிரதமரிடம் விஜய் வைத்த 7 கோரிக்கைகள்

  1. 65 கி.மீ. நீளம் கொண்ட 3-ம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
  2. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
  3. மாநிலங்களுக்கு இடையே ஒசூர் - கர்நாடகாவின் பொம்மசந்திரா மெட்ரோ திட்டத்திற்கு அனுமதிக்க வேண்டும்.
  4. செங்கல்பட்டு திருச்சி, பஞ்சப்பூர் - கரூர் ஜெயபுரம், கரூர்-கோவை, மாதவரம்-சோழவரம் நெடுஞ்சாலைகளை ஆறுவழிச் சாலையாக உயர்த்த வேண்டும்.
  5. கோதாவரி - காவிரி திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும்.
  6. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்.
  7. எவ்வித நிபந்தனையுமின்றி, சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழ் ரூ.5,110 கோடி நிதியை விடுவிக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow