சோனம் வாங்சுக் போராட்டம் எதிரொலி... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 16, 2026 - 16:30
சோனம் வாங்சுக் போராட்டம் எதிரொலி... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 28 ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மனுவில் சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் 18 வது நாளை எட்டியுள்ளது. இதன் மூலம் தற்போது சோனம் 8 கிலோ உடல் எடை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் அதைப் பற்றி  அரசுக்குக் குறைந்தபட்ச அக்கறை கூட இல்லை. வாங்சுக் உயிரிழந்தால் அது நாட்டிற்குப் பெரும் அவமானமாக இருக்கும். அவரது உயிரைக் காப்பாற்ற உடனடியாக அவருக்கு மருத்துவ உதவி அளிப்பதே அரசு செய்ய வேண்டிய குறைந்த பட்ச செயல் ஆகும்.

தற்போதைய சூழ்நிலையில் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது தற்கொலைக்குத் தூண்டும் குற்றத்தைச் செய்வதற்கு சமம் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது ஒரு குடிமகனின் அடிப்படை ஜனநாயக உரிமை ஆகும்.

மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்  கோரப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்   டி.கே. உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா  ஆகியோர் ஒவ்வொரு குடிமகனின் உயிர் விலைமதிப்பற்றது. அதைக் காக்க அரசு அதிகாரிகள் அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு மற்றும் தில்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஒவ்வொரு தனிநபரின் உயிரும் விலைமதிப்பற்றது. வாங்சுக்கிற்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையைத் தினந்தோறும அடிப்படையில் கண்காணிக்கவும் தேவைப்படும் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளோம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow