புகைப்பிடிப்பவர்களுக்கு ஷாக் நியூஸ் : பிப்ரவரி 1 ம் தேதி முதல் ஒரு சிகரெட் 72 ரூபாய் 

சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது இதனால் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒரு சிகரெட் விலை ரூ 72 விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

புகைப்பிடிப்பவர்களுக்கு ஷாக் நியூஸ் : பிப்ரவரி 1 ம் தேதி முதல் ஒரு சிகரெட் 72 ரூபாய் 
Shocking news for smokers:

மத்திய கலால் (திருத்த) மசோதா, 2025 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது சட்டமாக மாறும்பட்சத்தில் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைகளின் விலைகள் உயரும். நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி அறிமுகப்படுத்தினார். 

இந்த மசோதா, சிகரெட் மற்றும் சுருட்டுகள் முதல் ஹூக்கா மற்றும் மெல்லும் புகையிலை வரை பல்வேறு புகையிலை பொருட்களின் மீதான கலால் வரிகளை திருத்துகிறது. அதாவது இந்தப் பொருட்கள் மீதான கலால் மற்றும் வீத வரியை உயர்த்தி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

தற்போதைய சட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது. புதிய சட்டம் அமலானால், 1,000 சிகரெட்டுகளுக்கு, 2,700 - 11,000 ரூபாய் வரை வரி விதிக்கப்படும் என கூறப்பட்டது. 

அதே போல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் மற்றும் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 8% முதல் 279% வரை கூடுதல் வரி விதிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மத்திய அமைச்சகம். இதன்படி ஒரு சிகரெட்டின் விலை ரூ.72க்கு விற்கப்படலாம். புதிய மசோதாவின்படி, மெல்லும் புகையிலைக்கான வரியும் 25%லிருந்து 82%ஆக உயர உள்ளது. புதிய மசோதாவின்படி ஹூக்கா புகையிலைக்கான வரி 25%லிருந்து 33%ஆக உயருகிறது. புதிய மாசோதாவின்படி, குட்கா பொருட்களுக்கான வரி 90%ஆக உயருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow