டிமான்டி காலனி 3க்கு கிரீன் சிக்னல் ! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

அருள்நிதியின் "டிமான்டி காலனி 3" திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், புதிய ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Sep 29, 2026 - 17:30
டிமான்டி காலனி 3க்கு கிரீன் சிக்னல் ! சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Demonti Colony 3 Court Verdict !

அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "டிமான்டி காலனி 3" திரைப்படத்தின் வெளியீட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால், படத்தின் வெளியீட்டுக்கான பாதை மீண்டும் சீராகியுள்ளது. புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாரர் திரில்லர் களத்தில் உருவான டிமான்டி காலனி தொடர் :

கடந்த 2015-ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான "டிமான்டி காலனி " திரைப்படம், தமிழ் சினிமாவில் தனித்துவமான ஹாரர் திரில்லர் படமாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையால் கவனம் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு "டிமான்டி காலனி 2" திரைப்படம் உருவானது. இந்த படத்திலும் அருள்நிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், விஜே அர்ச்சனா, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் டிமான்டி காலனி 3 :

முதல் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இந்த தொடரின் மூன்றாவது பாகமாக "டிமான்டி காலனி 3" உருவாகியுள்ளது. தொடர்ந்து வரும் பாகங்கள் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

திரில்லர் மற்றும் ஹாரர் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கை குழுவால் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கதைக்களம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் நிலவி வருகிறது.

ஓடிடி உரிமம் தொடர்பான சர்ச்சை :

இந்நிலையில், ‘டிமான்டி காலனி 3’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜயா சுப்பிரமணியன் (வொயிட் நைட் எண்டர்டெயின்மென்ட்) தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தங்களின் அனுமதி இல்லாமல் படத்தின் ஓடிடி உரிமம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், வெளியீட்டுக்கான முயற்சிகள் தங்களுக்கு தெரியாமல் நடந்ததாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தொடர்ந்து, திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதனால் திட்டமிட்ட வெளியீடு தள்ளிப்போனது.

நீதிமன்ற உத்தரவால் நீங்கிய தடை :

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது "டிமான்டி காலனி 3" திரைப்படத்தின் மீதான இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் படத்தின் வெளியீட்டுக்கு ஏற்பட்டிருந்த சட்ட சிக்கல் நீங்கியுள்ளது. தயாரிப்பு தரப்பு மற்றும் படக்குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் வெளியாகும் புதிய ரிலீஸ் தேதி :

தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், "டிமான்டி காலனி 3"’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருள்நிதி - அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow