“Hukum” 2.0 ரெடியா? Jailer 2-வில் இருக்கும் அந்த 12 பாடல்கள்... ரஜினி fansக்கு செம்ம சர்ப்ரைஸ்!

“Hukum” மாதிரி இன்னொரு மாஸ் சம்பவமா? Jailer 2-வின் 12 பாடல் லிஸ்ட்டில் ஒளிந்திருக்கும் அந்த சர்ப்ரைஸ் என்ன? ரஜினி ரசிகர்களை கவர்ந்த லேட்டஸ்ட் அப்டேட். 

Sep 29, 2026 - 17:45
“Hukum” 2.0 ரெடியா? Jailer 2-வில் இருக்கும் அந்த 12 பாடல்கள்... ரஜினி fansக்கு செம்ம சர்ப்ரைஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘Jailer 2’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் இசை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், ‘Jailer 2 Album Tracklist’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Image

அதில் “Jailer 2 Theme”, “Hukum Reloaded”, “One Name”, “Dileep Theme”, “Shaitaan”, “Bindass” உள்ளிட்ட பாடல் தலைப்புகள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், “Ala Bolero”, “One Sun One Moon”, “Netru Ponavai”, “Veramaari”, “Putaapu Gang”, “Dil Haareya” போன்ற வித்தியாசமான தலைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

முதல் பாகமான ‘Jailer’ படத்தில் இடம்பெற்ற “Hukum” பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள “Hukum Reloaded” என்ற தலைப்பு ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘Jailer 2’ படத்தில் ரஜினிகாந்துடன் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த இசை பட்டியல் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசையில் மீண்டும் ‘Jailer’ மேஜிக் தொடருமா? அனிருத்தின் அடுத்த மாஸ் ட்ரீட் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பில் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow