’வடகிழக்கு பருவமழை.. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுதான்..’ - விளக்கும் துணைமுதல்வர் உதயநிதி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Oct 13, 2024 - 13:37
’வடகிழக்கு பருவமழை.. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இதுதான்..’ - விளக்கும் துணைமுதல்வர் உதயநிதி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழைக்காலத்தில் பொதுமக்களுக்கு பிரத்தியேக உதவி எண்ணாக 1913 என்ற உதவி எண் கொடுக்கப்பட்டு 150 பேர் நான்கு ஷிப்டக்களாக பணியாற்றி  வருகின்றனர்” 

”24 மணி நேரமும் பொதுமக்களின் பிரச்சனைகளை இந்த மையத்திலிருந்து  கவனிக்கப்படுகிறது. 13,000 தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளதாக கூறிய அவர். தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையில்  நூறு எச்பி பம்புகள் தயாராக உள்ளது,” என கூறினார்.

மேலும், ”தீவிர மற்றும் அதிதீவிர மழை எச்சரிக்கை தமிழகத்திற்கு விடப்பட்டுள்ள நிலையில் இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அரசு சார்பில் தமிழ்நாடு அலர்ட் என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் வாயிலாக மழை தொடர்பான  அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்” என கூறினார்

தொடர்ந்து பேசிய அவர், “நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடவும். ஏதேனும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தடுப்புகள் அமைத்து மூடப்படாமல் இருந்தால் பொதுமக்கள் அதனை மாநகராட்சி அதிகாரிகளுக்கு  தெரிவிக்கலாம்” என தெரிவித்தார். 

மேலும், கூடுதல் கழிவுநீர் அகற்று வாகனங்களும் மழைநீர் அகற்றுப்பணிகளில் ஈடுபட்டுள்ளது. மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளது” என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow