குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயில் தசரா திருவிழா.. சிறப்பாக நடந்த மகிசாசூரசம்ஹாரம்
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாக்களில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தரசா திருவிழா ஆகும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிகர நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசா சூரமர்தினீ கோலத்தில் கடற்கரையில் எழுந்தருளினார். முதலில் அம்மன் சாதராண முகத்துடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்தார்.
பின்னர் சிங்க முகமாக உருவம் மாறிய மகிசாசூரனை வதம் செய்தார். முடிவில், சேவல் உருவமாக மாறிய மகிசாசூரனையும் அம்மன் வதம் செய்தார்.
இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக்காண சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் குவிந்திருந்தனர். இதற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
What's Your Reaction?