அடுத்த பிரதமர் விஜயா?..... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

Aug 20, 2026 - 21:17
அடுத்த பிரதமர் விஜயா?..... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

சென்னை அருகே கோவளம் தனியார் ஹோட்டலில் தென் மாநில மாநாடு  உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய், கர்நாடகத்தின் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதலமைச்சர் விடி சதீசன், தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்காத நிலையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார்.

மாநாட்டை முடித்த கையோடு கர்நாடக முதலமைச்சர் டி.கே,சிவக்குமார் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளரை சந்தித்து பேசியபோது இன்று ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் என்பதால் அவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தியுள்ளேன். அவரை இந்நாட்டி இளைஞர்கள் யாரும் அவரை மறக்க முடியாது ஏனென்றால் இளைஞர்கள், மாணவர்களை தான் அவர் நம்பினார்.

18 வயதில் உள்ளவர்கள் பஞ்சாயத்து உறுப்பினர் முதல் எம்பி வரை வாக்களித்து தேர்வு செய்யலாம் என்பதை கொண்டு வந்து நாங்கள் எல்லாம் அவரது கட்சியின் தயாரிப்புகள் தான் இதனால் அவரது  செயல்பாட்டை தொடர்ந்த முன்னெடுத்து செல்ல உள்ளோம்.  ஏற்கனவே ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ' யாத்திரை நடைப்பயணத்தின்போது நான் இங்கு வந்துள்ளேன். இப்போது இந்த மீட்டிங்கின் மூலமாக மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு நேரு குடும்பம் நிறைய பங்களிப்பை வழங்கி உள்ள நிலையில் காங்கிரஸ் பலம் தான் நாட்டின் பலம் என்றும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஜவஹர்லால் நேரு, சோனியா காந்தி ஆகியோரின் தியாகம் இந்த நாட்டுக்காக இருந்துள்ளது. இதனல் கர்நாடகா முதலமைச்சர் என்ற அடிப்படையிலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்பதாலும் ராஜீவ் காந்திக்கு மரியாதை செலுத்தினேன்'' என்றார். 

மேலும் டி.கே.சிவக்குமாரிடம் செய்தியாளர் ஒருவர்,விஜய் தற்போது முதலமைச்சராக உள்ள நிலையில் அவரை பிரதமர் வேட்பாளராக சொல்லி வருகின்றதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? என்ற கேட்ட போது அதற்கு டிகே சிவக்குமார், ''அது எனக்கு தெரியாது. நான் எது பற்றியும் பேச விரும்பவில்லை. அரசியல்வாதிகள் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவதற்கு பதில் நாட்டை கட்டி எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்.

தென்னிந்திய முதலமைச்சர்கள் மீட்டிங்கில் இன்று முக்கிய விஷயம் பேசப்பட்டது. 1971 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்'' என்று கூறி சென்றார்.

தமிழ்நாட்டில் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் வரவேண்டும் என்று சட்டசபையில் பேசினார்.இந்த கருத்தால் காங்கிரஸ் தர்மசங்கடத்துக்கு ஆளாகி உள்ளது.

கூட்டணியில் இருந்தாலும் ஆதவ் அர்ஜூனாவின கருத்தை ஏற்றால் மேலிடம் சம்மதிக்காது என்றும், ஏற்காவிட்டால் தவெக - காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் வரும் என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் சிக்கலில் தவித்து வருகின்றனர். அந்த வகையில் தான் டிகே சிவக்குமார் பதில் சொல்லாமல் கிளம்பிவிட்டார்.


What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow