மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்திற்கு சிக்கல்: கமல்ஹாசன் அப்செட் 

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒற்றை இலக்கத்தில் சீட் ஒதுக்க உள்ளதால் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்திற்கு சிக்கல்: கமல்ஹாசன் அப்செட் 
மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்திற்கு சிக்கல்

பிப்ரவரி 21, 2018 இல் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் கமல் தம் கட்சிப் பெயர் மற்றும் கொடியை ஏற்றி வைத்தார்.அதை தொடர்ந்து 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. இந்த தேர்தலில் 3.72 சதவிகித வாக்குகளை பெற்றது. 

இதை தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் சரத்குமாரின் சமத்துவமக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திந்தன. 2.43 சதவிகிதம் வாக்குகளாக குறைந்தது. இந்த இரண்டு பொதுத்தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது.

ஆனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக திமுக, காங்கிரசு கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் பிரசாரம் மட்டும் மேற்கொண்டார். இந்நிலையில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது. 

இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாக தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் நீதி மய்யம் கடிதம் எழுதியிருந்தது. இதனால் டார்ச்லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கோரி இருந்தது. இதனை ஏற்று தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு டார்ச்லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. 

ஆனால் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒற்றை இலக்கத்தில் சீட் ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதனால் டார்ச்லைட் சின்னத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 12 தொகுதிகளிலாவது போட்டியிட்டால் மட்டும் பொதுசின்னம் கிடைக்கும். ஆனால் ஒற்றை இலக்கத்தில் மட்டும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவதால் டார்ச்லைட் சின்னத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow